2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘தீர்வு கிட்டாமைக்கு கூட்டமைப்பே காரணம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

தமக்கான தீர்வுகளை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக உள்ளதாக, வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்பாக, சுழற்சிமுறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், இன்று (07) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்ட, இன்றுடன் 900 நாள்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே, குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கபட்டது.

இதற்கமைய, முற்பகல் 11.30 மணியளவில், தாம் போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து கண்டி வீதி வழியாகப் பேரணியாக சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், மணிக்கூட்டுக் கோபுரச்சந்தியை அடைந்து, அங்கிருந்து கடை வீதி வழியாக, தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை வந்தடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976இல் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள். 2015இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்தனர். இப்போது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளகூடிய புதிய தலைமையே தேவை” எனும் வாசகத் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .