2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’தீர்வு விடயம் தொய்விலுள்ளது’

Editorial   / 2020 ஜூன் 17 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

தமிழ் மக்களுக்காகக் கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை என்பது அப்பட்டமான பொய் என்று தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் எதுவும் செய்து முடிக்கப்படாமல், ஒரு தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை என்றும் கூறினார்.

புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என, தற்போதைய  ஐனாதிபதியிடம் தாம் கோரியுள்ளதாகவும் அதில், தங்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டால், மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அது அரசாங்கத்துக்கான ஆதரவு என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் அரசமைப்பை உருவாக்கி, தமிழ் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஆதரவே அது என்றும் கூறினார்.

வவுனியாவில், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று (16) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கங்கள் மாறினாலும், தீர்வுக்கான செயற்பாடுகள் தொடருமென்றும் கூறிய அவர், எனவே இவ்வாறான நேரத்தில், வடக்கு - கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய தேவை உள்ளது என்றும் கூட்டமைப்பால் மாத்திரமே, அந்த பலத்தை ஒருமித்துக் காட்ட முடியும் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .