2025 மே 15, வியாழக்கிழமை

துட்டுவாகையில் வாயிற்கோபுரம் திறந்து வைப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலுக்கானதும் கிராமத்துக்கானதுமான நுழைவாயிற்கோபுரம், இன்று திறந்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் நிதிப் பங்களிப்போது அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தை, இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த சிற்பக்கலைஞர்கள் வடிவமைத்திருந்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செட்டிகுளம் பிரதேச செயலாளர் சி. சிவகரன், செட்டிகுளம் பிரதேசசபை தலைவர் ஆசீர்வாதம் அந்தோனி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .