Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஏப்ரல் 23 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
ராஜபக்ஷர்களை எதிர்த்து வடக்கிலும் இன்று (23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான கண்டன பேரணிக்கு முச்சக்கரவண்களின் சாரதிகளும் முச்சக்கரவண்டிகளுடன் தங்களுடைய ஆதரவை நல்கினர்.
பேரணியில் பங்கேற்றிருந்தவர்களுக்கு தண்ணீரூற்று நீராவிப்பிடிட்டி பகுதிகளை சேர்ந்த வணிகர்கள், குடிண்ணீர்களை வழங்கி போராட்டத்தினை வலுச்சேர்த்துள்ளார்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பாக வன்னி மேம்பாட்டு பேரவை ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
மதகுருமார்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள்,முச்சக்கரவண்டி சங்கத்தினர்,வணிகர்கள் வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025