Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கூட்டமொன்று, வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.
இதன்போது கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக வேட்பாளர்களுக்குத் தெளிவூட்டப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்டத் தேர்தல் திணைகளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சமன்பந்துலசேன, பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால்சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், இ.கனகரட்ணம் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்ட வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.மகேந்திரன், தேர்தல் பிரசாரம், வாக்களிப்பு நடவடிக்கைகளில் கையாளவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக வேட்பாளர்களுக்குத் தெளிவூட்டினார்.
அந்தவகையில் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் 100 பேர் மாத்திரமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், பிரசார நடவடிக்கைகளை முடிந்தவரை அச்சு, இலத்திரனியல், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் மேற்கொள்ளுமாறும் பரிந்துரை செய்ததுடன், கூட்டங்களில் பங்குபெறுவோர் ஒரு மீற்றர் அளவில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், முககவசங்களை அணியுமாறும் கோரியிருந்தார்.
அத்துடன், பிரசார குழுவினர் வீடுகளுக்குள் செல்வது அனுமதிக்கபடாததுடன், பிரசார ஊர்வலங்களையும் தவிர்க்குமாறும், பரிந்துரைகள் முன்வைத்திருந்தார்.
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago