Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அரசாங்க திணைக்களங்களில் சரியான தொடர்பாடல் இல்லாமையே குருநாகலில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னனின் அரசமண்டபம் இடிக்கப்பட்டமைக்கு காரணமாகுமென, ஜெனசெத பெரமுனவின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ஜீனரத்ன தேரர் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.,
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கூட்டமைப்பானது மக்களுக்கு எதனையும் செய்யவில்லையெனவும் இம்முறை தேர்தலில் கூட கூட்டமைப்பு சார்பில் முதியவர்களே களம் இறங்கியுள்ளனரெனவும் கூறினார்.
“அவர்களால் இனிமேல் எதனையும் செய்யமுடியாது. எனவே இளைமையான சேவையாற்றக்கூடிய இளைஞர்களை இம்முறை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.
“வன்னி மாவட்டத்தைப் பல்வேறு விடயங்களில் அபிவிருத்திசெய்ய வேண்டும். முன்னாள் அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியூதீன் ஓர் இனத்துக்கு மாத்திரமே உதவிகளை வழங்கினார். அதனை ஏற்கமுடியாது” எனவும் கூறினார்.
வன்னி மாவட்டத்துக்கு மருத்துவ பீடம் ஒன்று அமைக்க வேண்டிய தேவை இருப்பதுடன், அதனை அமைப்பதற்கான முயற்சிகளை நிச்சயம் எடுப்பதாகத் தெரிவித்த அவர், அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர் - யுவதிகளின் நலன்கருதி, அங்கு தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்க வேண்டுமெனவும் கூறினார்.
அத்துடன், அரசாங்க திணைக்களங்களில் சரியான தொடர்பாடல் இல்லாமையே குருநாகலில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னனின் அரசமண்டபம் இடிக்கப்பட்டமைக்கு காரணமெனத் தெரிவித்த அவர், அது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இவ்வாறான விடயங்களில் அரச நிறுவனங்கள் தொடர்பாடலை பேணி இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.
அத்துடன், “அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்படவுள்ள மிலேனியம் சவால் உடன்படிக்கை தொடர்பில் ஒவ்வொருவரும் சிறுபிள்ளைத்னமான கதைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே, அந்த விடயம் தொடர்பாக முழுமையாக ஆராயந்துவிட்டு, அது தொடர்பான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
35 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago