Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கீதாஞ்சன்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முகாமைத்துவ பீட மாணவர்களின் இறுதி ஆண்டுக்கான கள விஜயத்துக்காக, கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு, தொழில் முயற்சியாளுடனான சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்ட ச் செயலாளரின் வழிகாட்டலின் கீழ் தொழிற்றுறை திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில், மேலதிக மாவட்ட செயலாளர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மற்றும் வெற்றி பெற்ற தொழில் முயற்சியார்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்
இக்கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் வளங்கள், கைத்தொழில் துறைக்கான வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை முல்லைத்தீவு மாவட்ட தொழிற்துறை திணைக்கள மாவட்ட அலுவலரால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.
அத்துடன், மாவட்டத்தில் வெற்றி பெற்ற தொழில் முயற்சியாளர்கள் தமது அனுபவ பகிர்வினையும் மாணவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்கள்
மாணவர்களால் கேட்கப்பட்ட கைத்தொழில் துறைக்கான சந்தேகங்கள் மற்றும் வினாக்களுக்கு வெற்றி பெற்ற தொழில் முயற்சியாளர்களினால் பூரண அறிவு வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலின் பின்னர் , முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொழில் முயற்சியாளின் உற்பத்தி நிலையங்களை மாணவர்கள் சென்று பார்வையிட்டதுடன், உற்பத்தி தொடர்பான செய்முறை விளக்கங்களும் மாணவர்களுக்கு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்டன
இறுதியில், இது தொடர்பாக மாணவர்களின் அனுபவ பகிர்வில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமது கற்றல் தொடர்பாக இக்களச் சுற்றுலா பயனுள்ளதாக அமைந்ததாகவும் மாணவர்களுக்கு சிறந்த அனுபவம், அறிவை பெறக்கூடியதாக இருந்ததாகவும் எதிர்வரும் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கைத்தொழில் துறைக்கான வாய்ப்புகளை இனங்கண்டு அதனை நடைமுறைப்படுத்த மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
3 hours ago