2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும்

Niroshini   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரவை அனர்த்தத்தில் உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட  ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியின் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் இறுதி யுத்தத்தில் மாவீரா் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டதை போன்று அழிக்கப்பட்டது.

இதன்பின்னர், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் அந்த இடத்தில்   நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

26ஆம் திகதி எட்டு மணிக்கு நினைவுதூபியும் நினைவு மண்டபமும் திறக்கின்ற நிகழ்வும் 8.46 மணிக்கு சுடறேற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் இதில் உயிரிழந்த மக்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்  அழைப்பு விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .