Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா - தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரியில் கடந்த 2006.11.18 அன்று இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினம், வவுனியா - தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரியில் இன்று (18) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
வெளிக்களப் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றது. இதனையடுத்து, மாணவர்கள் சிலர் நிலத்தில் படுத்தபோது. அவர்களை இரானுவத்தினர் தம்வசம் அழைத்து வந்து சுட்டுப் கொலை செய்தனர்.
இச் சம்பவத்தில் களவாஞ்சிக்குடியை சேர்ந்த இராமசந்திரன் அச்சுதன் ( வயது-25), சுந்தரலிங்கம் ஜங்கரன்
(வயது- 21), திருமலையை சேர்ந்த சித்திரவேல் கோபிநாத் (வயது – 22), மட்டக்களப்பு - ஏறாவூரைச் சேர்ந்த சித்திக் அசான் நிஹான் மொகமட் ( வயது- 22), வவுனியாவைச் சேர்ந்த திருநாவுக்கரசு சிந்துஜன் ( வயது – 21) மாணவர்களே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களின் நினைவுதினம் இன்று விவசாயக் கல்லூரியில் அனுஷ்டிக்கப்பட்டதுடன், இரத்ததான நிகழ்வும் தாக சாந்தியும் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
47 minute ago
52 minute ago