2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’நந்திக்கடல் விரைவில் துப்புரவு செய்யப்படும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

நந்திக்கடலைத் துப்புரவு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளனவென, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று  (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நந்திக்கடல் துப்புரவு பணிகளைத் தொடங்கியபோது, சுயநல அரசியல்வாதிகள் சிலர் தேர்தல் காலம் எனத் தெரிவித்து, அப்பணிகளைத் தடை செய்தனரெனச் சாடினார்.

தற்போது தேர்தல் முடிந்து விட்டதெனத் தெரிவித்த அவர், நந்திக்கடலைத் துப்புரவு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளனவெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .