2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

‘நல்லாட்சியிலும் தீர்வில்லை’

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

நல்லாட்சியிலும். தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் எவையும் கிடைக்கவில்லை என, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் சுமார் 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில், தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகள் மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில்கள் என்பவற்றால், தமது தொழில் சார் நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளன என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்திடம், தமது வாழ்வாதாரத் தொழில்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோதும், அவை ஏற்படுத்தித் தரப்படவில்லை என, அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், முகத்துவாரத்துக்குச் செல்லும் வீதியை உள்ளடக்கிய வகையில், வட்டுவாகல் ஆற்றின் இரு புறமும், கடற்படையினரின் பயன்பாட்டில் இருப்பதாலும் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறுசாலை ஆகிய பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால் தமது தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடற்றொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .