Editorial / 2020 மார்ச் 31 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் மட்டுமே இடம்பெறுமென, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகவே இந்த நிலமை ஏற்பட்டுள்ளதென்றார்.
மேலும், ஏப்ரல் 6ஆம் திகதியன்று இந்த வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறுமெனவும் பங்குகொள்கின்ற அனுமதிக்கப்பட்ட 10 பேரும், பொது சுகாதாரப் பரிசோதகர், பிரதேச மருத்துவ அதிகாரி ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் பொலிஸாரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டுமெனவும், ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago