Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 செப்டெம்பர் 17 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீள்குடியேற்றத்துக்காக வழங்கப்படுகின்ற நிதியை, இராணுவத்துக்கு வழங்குவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என வட மாகாண புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
சமதளத்தில் ஒன்றாக எனும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களின் மாகாண மட்ட வணிகக் கண்காட்சியும் தொழிற்சந்தையும் கிளிநொச்சியில் நேற்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட அனந்தி சசிதரன் உரையாற்றுகையில், அபிவிருத்திகள் என்று பார்க்கப்படுகின் போது பல வேலைத் திட்டங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பகுதிகளில் கோடிக்கணக்கான நிதியைக் கொடுத்து மூடப்பட்டிருக்கின்றதைக் காண்கின்றோம். ஆனால், அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்களில் தொண்டு நிறுவனங்கள் எங்களுக்குக் காட்டுகின்றது, அங்கே மூடப்பட்ட அல்லது அந்தப் பிரதேசத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டங்களை முடிவுறுத்திவிட்டு, அதனை மக்களுக்கான கோடிக்கணக்கான அபிவிருத்தி என்று காட்டுகின்ற நிலைமைமையை நாங்கள் பார்க்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விசேட கவனமொன்றை மத்திய அரசாங்கம் வட மாகாணத்தினூடாக செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுத்தி வருகின்றோம். ஆனால் அவர்கள் எங்களையும் புறம தள்ளிவிட்டு தாங்கள் தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதால் ஒரு முகப்படுத்தப்பட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் ஒருவரையே பல உதவி போய்ச் செல்வதும் பலருக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போன்ற நிலமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.
வடக்கு மாகாணத்தில் பல மில்லியன் ரூபாய் நிதியை கேட்கின்றபோது, அதில் 10 சதவீத நிதியைக் கூடத் தருவதற்கு இந்த மத்திய அரசாங்கம் தயாராகவில்லை.எங்களுடைய பல திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு புறம் தள்ளப்பட்டிருக்கின்றன.
இதுதவிர, மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகின்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக எங்களுக்கு தரப்பட்ட திணைக்கள வேலைகளைக் கூட மத்திய அரசாங்கம் நேரடியாக செய்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.
இது மட்டுமல்ல பல கடமைகளை செய்வதற்கு எமது திணைக்களங்கள்சார்ந்த உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு கூட ஆளுநர் பல முட்டுக்கட்டைகளை போடுகின்ற நிலமைகளைக் கூட காண்கின்றோம்.
ஏனெனில் அவர்கள் மனதளவில் மிகத்திடமாக இருக்கின்றார்கள். வட மாகாண சபையை வினைதிறனற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்று காட்டுவதற்கு பல வேலைகளை செய்கின்றார்.
மக்களின் காணிகளில் படையினர் இருந்துவிட்டு, அதில் கட்டடங்களை அமைத்து விட்டு, அதிலிருந்து வெளியேறுவதற்கு பல மில்லியன் ரூபாய் நிதிகளைக் கேட்கின்றது, ஆனால், பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் அழித்த எதற்கும் இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago