Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - கண்டாவளை வைத்தியசாலைக்கு, நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு, கண்டாவளைக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும், தருமபுரம் வைத்தியசாலையில் இருந்தே வாரத்தில் இரு நாட்கள், கண்டாவளை வைத்தியசாலைக்கு வைத்தியர் பணிக்கு வருவதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, இக்கிராமத்துக்கான பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக, இக்கிராமத்தில் இருந்து போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில், தருமபுரம், கிளிநொச்சி பொது வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .