Freelancer / 2022 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பட்
மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய குற்றச்சாட்டில் மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக காணப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஆகிய இருவரும் திருடி உள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று(18) காலை விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் காவலாளி தங்குமிட பகுதியை சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது திருடப்பட்ட சான்றுப் பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளனர். (R)
2 minute ago
8 minute ago
11 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
11 minute ago
21 minute ago