2025 மே 22, வியாழக்கிழமை

’நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்த பிக்கு மனநோயால் பாதிப்பு’

சண்முகம் தவசீலன்   / 2019 ஜூலை 30 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து குடிகொண்டுள்ள பௌத்த பிக்கு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டதாக தேசிய ஒருமைபாடு, இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை  நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி அங்கு பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் தற்போது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது

குறித்த தகவலை மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இது தொடர்பில் அவர் கூறியதாவது

கடந்த வாரம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் என்னை சந்தித்தார்கள் அங்கே முகாமிட்டு இருக்கும் பௌத்த தேரருக்கு எதிராக அறங்காவலர்கள்  அளித்துள்ள புகாரை பொலிசார் விசாரிக்க வில்லை என்று கூறினார்கள்.

தொலைபேசியில் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் 'ஏன் பிக்குவை கண்டு விசாரித்து வாக்குமூலம் எடுக்கவில்லை' என கேட்டேன்

அதன்போது 'இல்லை ஐயா பிக்குவுக்கு மனநிலை சரியில்லை இப்போது அவர் கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்'; என்று எனக்கு பொறுப்பதிகாரி பதில் கூறினார் எனவும் அந்த முகநூல் பக்கத்தில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .