2025 மே 05, திங்கட்கிழமை

நீர் கட்டணப் பட்டியலும் e-Bill முறைக்கு மாற்றம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் (e-Bill) முறைக்கு மாற்றம் செய்யவுள்ளது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கடதாசி தட்டுப்பாடு, மாதாந்தம் பல மில்லியன் ரூபாய்களை சேமிப்பது,  எதிர்காலத்தில்  கட்டாய நடைமுறையாக வரவுள்ள தொழிநுட்ப முறைக்குள் பொது மக்களை  பழக்கப்படுத்துவது போன்ற பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு
தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. 

அந்த வகையில் பொது மக்கள் மின் இதழ் கட்டணப் பட்டியல் e-Bill முறைக்கு மாறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய இலகுவான நடிவடிக்கைள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X