Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ரம்பைவெட்டியில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், இன்று திறந்து வைத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறுநீரக நோய் தடுப்பு செயற்றிட்டத்தின் கீழ் சுமார் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதியிலும் வவுனியா பூனாவ கடற்படையினரின் பங்களிப்பிலும், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க சமாசத்தின் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா நகரசபை உபதவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உபதவிசாளர் மகேந்திரன் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இச்செயற்றிட்டத்தின் கீழ் இன்று, வவுனியா மாவட்டத்தின் மூன்று இடங்களில், நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .