2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நூலகத்தைத் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தைத் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளவில்லை என வன்னேரிக்குளம் வட்டார மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்டு கட்டட வேலைகள் நிறைவடைந்து ஓராண்டுகள் கடந்த நிலையிலும் குறித்த நூலகக் கட்டடத்தைத் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளவில்லை.

ஏற்கெனவே வன்னேரிக்குளம் வட்டாரத்தில் கரைச்சி பிரதேச சபையின் வேலைகள் ஒழுங்காக இடம்பெறுவதில்லை.

குறிப்பாக உள்ளக வீதிகள் புனரமைப்பில் கரைச்சி பிரதேச சபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குறைபாடு இவ்வட்டார மக்களிடம் காணப்படும் நிலையில் நூலகக் கட்டடத்தைத் திறந்து வைப்பதிலும் கரைச்சி பிரதேச சபை இழுத்தடிப்புகளை மேற்கொள்வதாகவும் குறித்த கட்டடத்தைத் திறந்து வைப்பதற்கு கரைச்சி பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னேரிக்குளம் வட்டார மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .