Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தேர்தல் பிரச்சாரத்திற்காக நெடுங்கேணி பிரதேசத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (20) வருகை தந்திருந்த நிலையில் பட்டிக்குடியிருப்பு மற்றும் ஒலுமடு பிரதேசங்களுக்கான மின் விநியோக மார்க்கங்களில் மின் துண்டிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமரின் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைப் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொருத்தப்பட்ட கருவிகளுக்கும் மற்றும் குறித்த பிரதேசத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டிக்குடியிருப்பு, மாராயிழுப்பை, ஒலுமடு போன்ற பிரதேசங்களுக்கான மின்சார விநியோக மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டு நெடுங்கேணி நகர மத்திக்கு மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச் செயற்பாட்டில் பொலிஸார் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இது தொடர்பில் ஏனைய கட்சி பிரதிநிதிகளினால் தேர்தல் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மின்சார சபையின் முறைப்பாட்டு பிரிவோடு தொடர்பு கொண்டு கேட்டபோது,
நெடுங்கேணி பிரதேசத்தில் உயர் மின் மார்க்கத்தில் தென்னை மரத்தின் ஓலை ஒன்று அழுத்திய நிலையில் காணப்பட்டமையால் குறித்த பிரதேசங்களுக்கான மின்சாரம் இடையிடையே துண்டிக்கப்பட்டு வருவதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்தப் பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சீர் செய்தமையே இந்த மின் துண்டிப்புக்கான காரணம் என தெரிவித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago