Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை. குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய நிலைப்பாடு உள்ளது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் கையேற்பும் கன்னி அமர்வும் இன்று (31) காலை 10 மணியளவில், மன்னார் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினுடைய நிர்வாக கட்டமைப்பு இன்று புதிய நிர்வாகத்திடம் கைமாறியுள்ளது. பழைய நிர்வாகத்தில் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
தனியார் பஸ் சங்கத்துக்கும் இலங்கை அரச கஸ் சங்கத்துக்கும் இடையில் நீண்ட காலமாக சின்னச் சின்ன பிரச்சினைகள் காணப்படுகின்றது.
குறிப்பாக, வவுனியா மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றது. வடமாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் செயலாற்று அதிகாரி அவர்கள் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான முறன்பாடுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எல்லோரும் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
அனைவருமே மக்களுக்காக சேவை செய்கின்றவர்கள். எனவே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் இணக்கப்பாட்டுடன் செயலாற்ற வேண்டும்.
தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை. குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய நிலை உள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago