2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மக்களில் சிலர், தமக்கு இதுவரை வாழ்வாதார உதவிகள் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (18) காலை 9.30 மணிக்கு,  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கூடிய மக்கள், வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் போது  ஒருசிலருக்கே தொடர்ச்சியாக வழங்கப்படுவதாகவும் இதனால், தாம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக , வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதிகளைப் பகிர்ந்தளிக்கும்  அமைப்புக்கள் பல, தமது விரப்புக்கேற்றவாறு வாழ்வாதாரத்தை வழங்குவதாகவும் இதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற ஒரு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .