2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பணத்தினை கொள்ளையிட்டவருக்கு பிணை

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பி​ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நண்பர்கள் விருந்தகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணத்தினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பர்கள் விருந்தினர் விடுதியில்,  கடந்த ஜூன் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்டமை தொடர்பில், கடந்த ஜூன் மாதம் 09ஆம் திகதி  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் விடுதியில் பொருத்தப்பட்ட சீ.;சீ.ரீவி கமெரா பதிவுகளை ஜூன் மாதம் 28ஆம் திகதி  பார்வையிட்டு அதனை  அடிப்படையாக வைத்து சந்தேக நபர், ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் தொடர்ந்தும்  புதன்கிழமை (11) வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ரீ. சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளிலும் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணையிலும் செல்லுமாறும் உத்தரவிடப்பட்டு, நவம்பர் மாதம் 13ம்திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X