Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
புளியங்குளத்தில் சுகாதார பரிசோதகரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சகோதரருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு - புளியங்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வவுனியா வடக்கு பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா, புளியங்குளம் வடக்கு சுகாதார பரிசோதகர் நிசாந்தன் ஆகியோர் சுகாதார பரிசோதனைக்காக சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சுகாதார சீர்கேடு காணப்பட்டதாக, குறித்த ஹோட்டலுக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கைக்காக பதிவு செய்த போது, அந்த ஹோட்டலில் நின்ற அதன் உரிமையாளர், உரிமையாளரின் சகோதரர் ஆகிய இருவரும் சுகாதார பரிசோதகர்களுடன் முரண்பட்டு, அவர்களது நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.
இதையடுத்து, சுகாதார பரிசோதகர்கள் புளியங்குளம் பொலிசில் செய்த அரச உத்தியோகத்தரான தமது செயற்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியதாக செய்த முறைப்பாட்டையடுத்து, ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், ஹோட்டல் உரிமையாளரின் சகோதரனுக்கு நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சுகாதார சீர்கேடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago