2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’பதுங்கு குழிகளை முற்றாக அழிக்கவும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கரைதுறைபற்றின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற பதுங்கு குழிகளை முற்றாக அழித்து தெங்குச் செய்கை உட்பட அனைத்து பயிர்ச் செய்கைகளுக்கும் வழியேற்படுத்துமாறு மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டில், இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் எமது கிராமம் முழுவதிலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. இப்பதுங்கு குழிகள் மூடப்படாததன் காரணமாக மழை காலத்தில் பதுங்கு குழிகளில் தேங்கி உள்ள மழை வெள்ளம் காரணமாக நுளம்புப் பெருக்கம் உட்பட விச ஜந்துகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.

பதுங்கு குழிகள் மூடப்படாததன் காரணமாக பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காலத்தின் நீரோட்டங்கள் திசை மாறி மழை வெள்ளம் தேங்கி நிற்கின்ற நிலைமை காணப்படும்.

எனவே, இனிவரும் காலம் மழை காலம் என்பதால், குறித்த பதுங்கு குழிகளை மூடி மக்களின் பாதுகாப்புக்கும் விவசாய முயற்சிகளுக்கும் மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X