2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பதுளை விபத்தில் மற்றுமொரு மாணவனும் உயிரிழப்பு

Freelancer   / 2024 நவம்பர் 23 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில்  போது, பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்திருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பயிலும்,  யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, கைலைநாதன் சிந்துஜன் என்பவரே 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் முன்னதாக நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். இதையடுத்து குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில், இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X