2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பஸ் நிலைய கடைகளில் திருடர்கள் கைவரிசை

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள இரண்டு கடைகளில் திங்கட்கிழமை இரவு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமைபோல கடையைத் திறப்பதற்காக நேற்றக் காலையில் சென்ற உரிமையாளர்கள், கடை உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, வவுனியா பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

பஸ் தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக் கட்டடத்தொகுதியின் மேல்மாடியில் அமைந்திருந்த இறுவட்டு விற்பனை செய்யப்படும் கடையின் முன்கதவினை உடைத்த திருடர்கள,; அங்கிருந்த  பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

கடையில் இருந்து பீடிகள், கடை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட  அலவாங்கு என்பன மீட்கப்பட்டுள்ளன.

அதேக் கட்டடத் தொகுதியில் கீழ் மாடியில்  உள்ள புடவைக் கடை ஒன்றும் அதன் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திருட்டப்பட்டுள்ளது.

குறித்த கடைகள் அமைக்கப்பட்டுள்ள கட்டத்தொகுதியில் நகரசபையின் காவலாளி கடமையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .