2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை தொடங்கும் நேரத்தில் டிப்பர்களுக்கு தடை விதிக்கவும்

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்   

கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை தொடங்கும் நேரத்தில் மணல் டிப்பர்கள் பயணிப்பதைத் தடை செய்யுமாறு கிளிநொச்சி பொலிஸாரிடம் பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

திருமுறிகண்டி தொடக்கம் பரந்தன் வரை டிப்பர்களால் மாணவர்களுக்கு ஆபத்து உள்ளது. திருமுறிகண்டி பாடசாலை, சிவபாதகலையக பாடசாலை, கனகாம்பிகைக்குளம் பாடசாலை, பாரதி வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் பாடசாலை, பரந்தன் இந்து மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் காலை வேளையில் பாடசாலைக்கு வரும்போது மணல் டிப்பர்களின் பயணிப்புகளால் உயிராபத்துகள் உள்ளது.

இது தொடர்பாக பாடசாலை நிர்வாகங்களிடம் பெற்றோர்களால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காலை 6.45 தொடக்கம் 8 மணி வரை ஏ-9 சாலையில் மணல் டிப்பர்களைப் பயணிப்பதைத் தடைசெய்யுமாறும் பொது அமைப்புகள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

திருமுறிகண்டி தொடக்கம் இயக்கச்சி, பளை, முகமாலை வரை பாடசாலை மாணவர்களுக்கு டிப்பர்களினால் ஆபத்து காணப்படுவதாக, பெற்றோர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், கிளிநொச்சி நகரத்தில் மாணவர்களுக்கு டிப்பர்களினால் ஆபத்துகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .