Freelancer / 2023 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரமந்தனாறு பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த குழந்தை உடனடியாக தருமபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையினரால் குழந்தையை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து உறவினர்கள் அந்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு, பொரள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த பொழுது அன்றைய தினமே மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. R
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago