2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாலத்தினை புனரமைக்கவும்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு பிரதான வீதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சேதமடைந்து காணப்படுகின்ற பாலத்தினை புனரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நகரத்தின் பிரதான வீதியாக காணப்படும் முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் முல்லைத்தீவு பேருந்து நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள சங்கிலிப்பாலம்; சேதமடைந்து மக்கள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் பாலத்துக்காக அருகாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதையூடாகவே மக்கள் போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு வீதி புனரமைக்கப்பட்டபோதும், குறித்த பாலம் புனரமைக்கப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, மேற்படி பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரிககை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .