2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாலம் புனரமைக்கப்படாமையால் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கனகபுரம், 9ஆம் பண்ணை வீதியில் அமைந்துள்ள பாலம் கடந்த பருவமழைக் காலத்தில் உடைந்துள்ள நிலையில், இன்றுவரை குறித்த பாலம் புனரமைக்காமையால் அவ்வீதி வழியால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதென, பிரதேச  மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாலம் உடைந்து காணப்படுவதனால்,  அந்த வீதி வழியாக சில இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள்  பல கிலோமீற்றர் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, தங்களுக்கு தேவையான கட்டுமாணப் பொருள்களைக் கூட வாகனங்களில் ஏற்றிவர முடியாதுள்ளது எனவும் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே நெருக்கடி நிலையை உணர்ந்து, இந்தப் பாலத்தை விரைவாக புனரமைத்து தருமாறும்,  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .