2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்களால் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன், வீதியில் வழிமறித்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்து, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மணல் அகழ்வு கிறவள் அகழ்வு, மரக்கடத்தல் என்பன வகைதொகையின்றி இடம்பெற்றுவருகின்றன.

இந்த வகையில், குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குறித்த பிரதேச சபை உறுப்பினர் கடந்த பிரதேச  கூடடத்திலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில்,  நேற்றைய தினம் மாலையில் தனது உறவினர்களின் வீட்டுக்கு வருகை தந்து செல்கின்ற போது மேழிவனம்  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்,  தன்னுடைய வாகனத்துக்கு முன்பாக  வாகனங்களைக் கொண்டு வந்து விட்டதாகவும் தன்னை கீழே இறக்க முயற்சித்ததாகவும்  அதனை தொடர்ந்து பொலிஸாரின் உதவியை நாடி அவர் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு மரக்க கடத்தல் தொடர்பாக தொடர்ச்சியாக பிரதேச அபிவிருத்திக் குழுக்  கூட்டங்களில், இந்த விடயங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் இதுவரை அது தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலைமையில், தானே இந்த விடயங்களை கொண்டு செல்வதாக தெரிவித்து தன்னை அச்சுறுத்தியதாகவும் இந்நிலையில் பாதிக்கப்பட்டபிரதேச சபை உறுப்பினர், மாங்குளம் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ .பிரேமகாந்த்,  உரிய தரப்புகள் சரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை எனவும் இதனாலேயே  இவ்வாறு தனிநபர்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே, உரிய திணைக்களங்கள் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .