Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத அமைச்சரவையே உருவாக்கப்பட்டுள்ளதென்று, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடர் ஏற்றி தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதெனவும் இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை முழுக்க முழுக்க சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிறுவக்கூடிய வகையில் குடும்பத்தின் ஆட்சியினை நிலை நிறுத்தக்கூடிய வகையிலும் தான் இந்த ஆட்சியின் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
“தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது மிகவும் கேள்விக்குரிய காலகட்டமாக இருக்கின்றது. தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியள்ளார்கள். குறிப்பாக முல்லைத்தீவு மண் பறிபோகக்கூடிய நிலை இருக்கின்றது.
“அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது நாடாளுமன்றம் சென்றுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான கடமை தமிழ் மக்களின் இருப்புகளை பாதுகாப்பது, தமிழர்களின் மண் பாதுகாக்கப்பட வேண்டும், வடக்கு - கிழக்கு நிலத்தொடர்ச்சி என்பது பாதுகாக்கப்பட வேண்டும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக உலகத்தின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்” என்றார்.
வந்துள்ள அரசாங்கம், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான அரசாங்கமெனத் தெரிவித்த அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் கொள்கை ரீதியாக இவ்வாறான விடயங்களில் அவர்கள் ஒன்றிணைய வேண்டுமெனவும் கூறினார்.
“அவ்வாறு ஒன்றிணையாமால் தனித்து செயற்படுவோம் என்பது வெளியில் பேச்சளவில் சரியாக இருந்தாலும், செயற்பாட்டினை பொறுத்தமட்டில் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் சரி வடக்கு, கிழக்கின் தனித்துவங்களும் அந்த மண்ணின் இருப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான விடையமாகும். இந்த விடயத்தில் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவையுள்ளது. இல்லாவிட்டால் கடுமையான நிலையினை எதிர்நோக்கும் கட்டத்தில் நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்” என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago