Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
இலங்கைத் தமிழரக் கட்சியின் பிரமுகர் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அன்னலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள், நவம்பர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதியன்று, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற காணி விடுவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன், து.ரவிகரன்,
அ. சண்முகலிங்கம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணை கோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.
இந்த நிலையில், சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் (18), இந்த வழக்கு விசாரணைகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
50 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
52 minute ago
1 hours ago