2025 மே 15, வியாழக்கிழமை

புதிய உறுப்பினரை நியமிக்க டெலோ நடவடிக்கை

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மனோ ஐங்கர சர்மாவுக்குப் பதிலாக புதிய நகர சபை உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு டெலோ நடவடிக்கை எடுத்துள்ளது.

மன்னார் நகர சபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் மனோ ஐங்கர சர்மா போட்யிட்டு வெற்றி பெற்று, மன்னார் நகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட குறித்த நகர சபை உறுப்பினர், தான் கட்சியில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த நகர சபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்தமையை தொடர்ந்து, அதனை பரிசீலினை செய்த டெலோ, அவர் வகித்த மன்னார் நகர சபை உறுப்பினர் பதவிக்குப் பதிலாக   கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, மனோ ஐங்கர சர்மாவுக்குப் பதிலாக மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிட்ட சமாதான நீதவான் என்.கணேசலிங்கத்தை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, டெலோ அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .