2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘புதிய கட்சிகள் கைக்கூலிக்காக வேலைசெய்கின்ற கூட்டம்’

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

“தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவேண்டும் என்பதற்காக  சிங்கள அரசாங்கத்தை விமர்சிப்பதை விட்டுலிட்டு, கூட்டமைப்பினை பற்றித்தான் புதிய கூட்டணியினர் விமர்சிக்கின்றார்கள்” என, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவாராசா தெரிவித்தார்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கைக்கூலிக்காக அவர்கள், இந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள் எனவும், அவர் கூறினார்.

முல்லைத்தீவில், நேற்று நடைபெற்ற டெலோ கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை. இப்போதும் தமிழர்களின் போராட்டம் அரசியல் வடிவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைத் துரோகிகளை கொண்டு முடக்கியதோ அரசாங்கம் அதேபோல தமிழர்களின் ஜனநாயவழி போராட்டத்தை முடக்குவதற்கு பல அமைப்புகளை எங்களில் இருந்தே அரசாங்கம் உடைத்துக்கொண்டிருக்கின்றது 

முதலமைச்சராக இருந்தவர் எங்களில் இருந்து பிரிந்து எங்களுக்கு எதிராக கூட்டமைப்பினை சீரளிக்கின்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். ஐங்கரநேசன் ஒருபக்கம் அனந்தி ஒரு கட்சி, சிவாஜிலிங்கம் ஒரு கட்சி,  முதலமைச்சர் ஒரு கட்சி என்று சேர்ந்து சொல்கின்றார்கள். மாற்றுத்தலைமை ஒரு கட்சிக்கு கீழே ஒன்றுபட முடியாத நீங்கள், கூட்டமைப்பு எதிராக எவ்வாறு மாற்றுத்தலைமையை அமைக்க முடியும். எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .