2025 மே 21, புதன்கிழமை

புதிய கற்பகபுரம் மக்களுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - புதிய கற்பகபுரம் கிராமத்தில், கிராமத்தின் முன்னேற்றத்துக்காக செயற்படுபவர்களுக்கு, அரசியல் கட்சியொன்றால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இதனால் கிராமத்தின் அபிவிருத்தியை தொடர்ந்து செயற்படுத்த முடியவில்லையாதுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

வவுனியா மாவட்டச் செயலாளர் ஐ.எம். ஹனீபாவிடம் தமது கிராமத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மகஜரொன்றைக் கையளிப்பதற்காக, மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்த புதிய கற்பகபுரம் கிராம மக்கள், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தனர்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அக்கிராம மக்கள், இக்கிராமத்தில், கடந்த 3 வருடங்களாக கிராம அபிவிருத்திச் சங்கம் செயற்படாமல் உள்ளதாவும் மக்களாக முன்னின்று, கிராமத்துக்கான வாழ்வாதார உதவிகள், அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது, அங்கிருக்கும் சிலர் அச்சுறுத்தல் விடுப்பதுடன், உதவிகளையும் அமைப்புகள் உருவாக்கத்துக்கும் தடையேற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதன் போது, மகஜரைப் பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, புதிய கற்பகபுரம் கிராமத்தவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

இதையடுத்து, குறித்த கிராம மக்கள். பிரதேச செயலாளரிடம் சென்று, தமது கிராமத்தின் பிரச்சினைகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .