Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளம் கிராமத்தில், தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற குடிநீர்த் திட்டத்தால், குடிநீரைப் பெற்றுக் கொள்வதில், அப்பகுதி பொதுமக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஆனைவிழுந்தான் குளத்தில் உள்ள வடிசாலைக் கிணற்றில் இருந்து, ஆனைவிழுந்தான் சந்தி வரை முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் விநியோகத் திட்டத்தால், பொதுக் குழாய்களில் இருந்து குடிநீர்ப் பெறுவதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.
இந்த குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்தவுடன், ஆரம்பத்தில் இருக்கும் குடும்பங்கள் பொது குழாய்களில் சிறிய நீர்க்குழாய்களைப் பொருத்தி தமது வீடுகளுக்குள் பெரிய பாத்திரங்களைக் கொண்டு குளிப்பதற்கும் பிற தேவைகளுக்கும் நீரை நிரப்புவதால், ஆனைவிழுந்தான் சந்தி வரை செல்ல வேண்டிய குடிநீர் இடைநடுவில் தடைபடுகின்றது.
இதன் காரணமாக, குடிநீரைப் பெற வேண்டிய குடும்பங்கள், குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025