Freelancer / 2022 ஜூலை 03 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தில் இராணுவ புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலுக்கமைய இரண்டு வாகனங்களும் அதில் இருந்த 10 பேரையும் முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
தென் பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் இருந்து ஸ்கானர் இயந்திரம் ஒன்று, பூசை வழிபாட்டுக்குரிய பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
ஜா-எல பகுதியினை சேர்ந்த இருவர், அம்பலாந்தோட்டை பகுதியினை சேர்ந்த மூவர்,பதவி சிறீபுர பகுதியினை சேர்ந்த இருவர் அவிசாவளையினை சேர்ந்த ஒருவர் மொரட்டுவ பகுதியினை சேர்ந்த ஒருவர் கண்டியினை சேர்ந்த ஒருவர் என 10 பேரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், புதையல் தோண்ட வந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இவர்களை நேற்று 02.07.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது பத்து பேரையும் எதிர்வரும் 14.07.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். (R)
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago