2025 மே 22, வியாழக்கிழமை

புனரமைப்புப் பணிகள் நிறைவு

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஷ்ணகுமார்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடைய  1   மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இயக்கச்சி - கொற்றாண்டார் குளம், முதலாம் குறுக்கு வீதி,  புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு  நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத மணல்  வீதியாக காணப்பட்ட குறித்த வீதியை புனரமைத்து தருமாறு, மக்கள் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில்,  குறித்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அப்பணிகளை,  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் சுரேன்,  இலங்கை, தமிழரசுக் கட்சியின்  இயக்கச்சி வட்டார பிரதேச சபை உறுப்பினர்  தவராசா ரமேஷ்  ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். 

இங்கே குறித்த பிரதேச மக்களை சந்தித்து கருத்துரைத்த தவிசாளர், குறித்த பிரதேசத்தின்  அபிவிருத்திகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும்  எதிர்வரும் காலங்களிலும் பிரதேச  அபிவிருத்தி  மிகவும் துரிதமாக மேற்கொள்வோம் எனவும் மக்களிடம் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X