2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புனித யாகப்பர் திருச்சொரூபம் உடைப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறு நீலாசேனை கிராமத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்துக்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச்சொரூபம், நேற்று  (13) இரவு இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, நொச்சிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த புனித யாகப்பர் ஆலயத்துக்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச்சொரூபமே இவ்வாறு உடைத்துச் தேசதப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட புனித யாகப்பர் திருச்சொரூபம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் கண்ணாடிப் பெட்டியின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த புனித யாகப்பர் திருச் சொரூபத்தை எடுத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், புனித யாகப்பர் திருச்சொரூபத்தின் தலை மாத்திரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .