2025 மே 15, வியாழக்கிழமை

’புறக்கணிக்கப்பட்டவர்களினதும் கருத்துகளும் பெறப்படும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை, தேர்தலில் வெற்றியடைந்தவர்களினதும் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களினதும் கருத்துகளைப் பெற்று கூட்டங்களை நடத்தவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில், நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எப்போது நடைபெறுமென்று, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், திங்கட்கிழமை (24), கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாயத்த கூட்டம் நடைபெறவுள்ளதென்றார்.

நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தேர்தலில் வெற்றியடைந்தவர்களினதும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களினதும் கருத்துகளை மக்கள் நலன்சார்ந்து பெற்று கூட்டத்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர், தனது அரசியல் வாழ்வில் அரசியல் பழி வாங்கல்கள் எப்போதும் இருந்ததில்லை எனவும் மக்கள் நலன்சார்ந்து தனது பணி இருந்ததாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .