2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘புலிகளின் செயற்பாடுகளை கரைச்சி பிரதேச சபை முன்னெடுக்காது’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

அரச திணைக்களம் என்ற வகையில், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை அல்லது அவர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கக்கூடிய செயற்பாடுகளைத் தாங்கள் ஒருபோதும் முன்னெடுக்க போவதில்லையெனத் தெரிவித்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன்,  பிரதேச சபைகளினுடைய செயற்பாடுகளுக்குள்ளே சட்டத்துக்குப் புறம்பான விடயங்களைக் கொண்டுவந்து, அரசியல்மயமாக்கும் செயற்பாடாக பொலிஸாரின் செயற்பாடைப் பார்ப்பதாகவும் சாடினார்.

கிளிநொச்சியில், நேற்று  (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தரைத்த அவர், கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள சேவைச்சந்தை, பசுமைப்பூங்கா ஆகியன கடந்த மூன்று நாள்களாக இராணுவத்தனரின் கட்டுப்பாட்டில் உள்ளனவெனவும் அவற்றின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் வசப்படுத்தி உள்ளனரெனவும் சாடினார்.

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத வகையில், அந்தப் பகுதிகள் காணப்படுன்றனவெனவும், அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில்,  500 பேரை இணைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து,  நீதிமன்றத்தைத் திசை திருப்பும் வகையில், பொலிஸாரால், ​திங்கட்கிழமை (18) தடையுத்த​ரவை வழங்கியதாகவும் அவ்வாறான நிகழ்வொன்றை தாம் ஏற்பாடு செய்திருக்கவில்லையெனவும், வேழமாலிகிதன் தெரிவித்தார்.

பிரதேச சபை என்பது ஓர் அரச திணைக்களமெனத் தெரிவித்த அவர், இந்தத் திணைக்களத்தில் ஒருபோதும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் செயற்பாடுகளையோ ஊக்குவிக்கும் வகையில் செயற்பட போவதில்லையெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .