2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெட்டிப்பாலம் அமைக்கும் வேலைகள் ஆரம்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - இராமநாதபுரம், புதுக்காடு அழகாபுரி வித்தியாலயம் செல்லும் வீதியில் பெட்டிப்பாலம் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

கரைச்சி பிரதேச சபையின் நிதியில் குறித்த பால வேலைகள் நடைபெற்று வருகின்றன. வெற்றிப்பாதை சனசமூக நிலையம், மாவடியம்மன் சனசமூக நிலையம் என்பன வேலைகளைப் பொறுப்பேற்று மேற்கொண்டு வருகின்றார்கள்.

மழை காலத்தில் வெள்ளம் வீதியினைக் குறுக்கறுத்துப் பாய்வதன் காரணமாக மாணவர்களும் பொது மக்களும் பயணிப்பதில் ஆண்டுதோறும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது குறித்த பால வேலைகள் நடைபெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X