2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பேசாலை, காட்டாஸ்பத்திரி பகுதியில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட மீன் வாடிகள்  ஞாயிற்றுக்கிழமை இரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 வாடிகள், 25 குதிரை வலு கொண்ட 3 மீன்பிடி இயந்திரம், பெறுமதிமிக்க  நண்டு, சூடை, கிளைக்கன் மீன் வலைகள்,  பல பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளன.

கடந்த 13 ஆம் திகதி  தனி நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த நபர் இந்த நாசகார வேலையை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்கு உரிய நீதி கிடைக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நேற்று மன்னார் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகரிடம்  முறையிட்டுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X