2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பேருந்து சேவை வேண்டும்; அவசர கடிதம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

மடுத் தேவாலயத்திற்கு பக்தர்கள் சென்று வர பேருந்து சேவை செய்து தருமாறு இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான பிராந்திய முகாமையாளருக்கு  பூநகரி    பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் கடிதம் ஒன்றினை அவசரமாக அனுப்பி வைத்துள்ளார். 

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மடுத் தேவாலயத்தின் பெருவிழா 10.08.2022 தொடக்கம் 16.08.2022 வரையான காலப்பகுதியில் நடைபெறுகின்றன. பல நுற்றுக்கணக்கான பக்தர்கள் வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில், முழங்காவில், குமுழமுனை, ஜெயபுரம், இரணைமாதாநகர் என எமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து பல கிராமங்களில் இருந்து மடுத் தேவாலயத்திற்கு வருடாவருடம் சென்று வருகின்றார்கள். 

இவ்வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலையேற்றம் ஏனைய பொருட்களின் விலையேற்றங்கள் எனப் பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியினால் மடுத் தேவாலயத்திற்கு மக்கள் சென்று வருவதில் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவதில் தடைகள் காணப்படுகின்றன.  

எமது பிரதேசத்தில் இருந்து மடுத் தேவாலயத்திற்குச் சென்று வருவதற்கு தனியார் வாகனத்திற்கு குடும்ப ஒன்றிற்கு ரூபா ஒன்றரை இலட்சம் தேவைப்படுகின்றது. 

இந்நிலையில் பொதுப் போக்குவரத்து மூலமாக மடுத் தேவாலயத்திற்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ந்து எமது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறிரஞ்சன் அவர்களிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. 

தாங்கள் இவ்வாறு விசேட போக்குவரத்து சேவையை நிச்சயமாக ஏற்படுத்தி தருவீர்கள் என நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுடன் தங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் எமக்கு அறிவித்து உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் எனக் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்,  பூநகரி    பிரதேச செயலாளர், இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர், பங்குத் தந்தைகள், முழங்காவில், குமுழமுனை, வலைப்பாடு, நாச்சிக்குடா, கிராஞ்சி ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .