நடராசா கிருஸ்ணகுமார் / 2018 ஜனவரி 21 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறுடை மற்றும் பொங்கல் நிகழ்வு, நேற்று (20) கிளிநொச்சி வட்டக்கச்சி பண்ணையில் இடம்பெற்றது.
இதில் முன்னதாக நெல் அறுவடை நிகழ்வும் பின்னர் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றன.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரட்ண பல்லேகம இவ்விரு நிகழ்வையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிபாளர் நாயகம் உள்ளிட்ட அதிதிகள் முறைப்படி நிகழ்வில் கலந்துகொண்ட போதும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர பொங்கல் பானைக்கு அரிசி இடும்போது, காலணியுடன் (சப்பாத்து) காணப்பட்டார்.
இது, நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சலசலப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது.
சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வில், அதனை மதிக்காது அலட்சியம் செய்வது போன்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago