Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 18 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று (18) ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, வுனியா நகரசபை உறுப்பினர் எம்.எஸ். அப்துல் பாரி உள்ளிட்ட இருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவு - பகல் பாராது அரச உத்தியோகத்தர்கள் ஒரு வரிசையிலும், பொதுமக்கள் ஒரு வரிசையிலும் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலிஸார், தமக்கான புதிய வரிசையை உருவாக்கி, எரிபொருளை பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
மேலும், பொலிஸார் தங்களுக்கான எரிபொருளை பெற்ற பின்னரே அரச ஊழியர்கள் பெற முடியுமென தெரிவித்தமையால் அரச ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன், இது தொடர்பாக பொலிஸாரிடம் தட்டிக்கேட்ட நகரபை உறுப்பினர் பாரி மற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், இரு பொலிஸாருக்கு; இரு அரச ஊழியர்கள் என்ற ரீதியில் எரிபொருளை வழங்க பொலிஸார் உடன்பட்டதன் பின்னரே, குறித்த குழப்ப நிலை முடிவுக்கு வந்திருந்தது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் போது பொலிஸார் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை பெற்றுச்செல்வதால் தங்களுக்கான எரிபொருளை பெறுவதற்கு பல நாட்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025