2025 மே 22, வியாழக்கிழமை

பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கம் திறப்பு

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில், இன்று (18) காலை,  வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவால், அநுரா அபேவிக்கிரம உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரங்கம் திறப்பு விழா நிகழ்வில், மாமடு விஹாராதிபதி, வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர அபேவிக்கிரம, மடுக்கந்த விஷேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர், கா.உதயராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில், கலந்துகொண்ட அதிதிகளினால், அரங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .