2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு’

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களும் அவர்கள் சார்பான அரசியல்வாதிகளும் மாறி மாறி பொய்யான கருத்துகளை தெரிவித்து வருகின்றனரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களின் மனக்கிலேசத்தை சிந்தித்து பார்க்காத நிலையே நீடித்துவருகின்றதென்றார்.

“எனவே, அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய முழுப்பொறுப்பும் அன்று பாதுகாப்பு அமைச்சராகவும் அதன் செயலாளராகவும் பதவி வகித்த மஹிந்த, கோட்டா ஆகியோரிடமே உள்ளது. இந்த அரசாங்கம் இராணுவத்தை விசாரித்து, காணாமல் போனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .